பிரபல நடிகரால் மாபெரும் படத்திலிருந்து வெளியேறிய நயன்தாரா.. மிஸ் ஆன மெகா பட்ஜெட் திரைப்படம்
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை நயன்தாரா, ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் பக்கம் பிரபலமானார். தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகளும் நயன்தாராவிற்கு வருகிறது என்றும் கூறப்படுகிறது.
இவர் கைவசம் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் உள்ளன. தெலுங்கில் கண்ணப்பா எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை நயன்தாரா கடவுள் பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. பான் இந்தியா ஸ்டார் ஆன பிரபாஸ் சிவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டது.
வெளியேறிய நயன்தாரா
சிவன் ரோலில் நடிக்கவிருந்த பிரபாஸ் தற்போது அப்படத்திலிருந்து விலகிவிட்டாராம். இதை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கவிருந்த சிவன் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நடிகர் அக்ஷய் குமாரின் வருகை காரணமாக நடிகை நயன்தாராவும் தற்போது கண்ணப்பா படத்திலிருந்து விலகிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.நயன்தாராவிற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். தொடர்ந்து இதுபோன்ற செய்திகள் வெளிவந்தாலும், படக்குழுவிடம் இருந்து இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.
No comments