Vettri

Breaking News

தேவைகளை தேடி மக்களுடன் நாம்" நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பலாச்சோலை கிராமத்தில் மக்கள் சந்திப்பு!




 "தேவைகளை தேடி மக்களுடன் நாம்" நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பலாச்சோலை கிராமத்தில் மக்கள் சந்திப்பு!

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் சிந்தனைக்கு அமைய, கட்சியின் போரதீவு பற்று பிரதேச குழுவினால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் "தேவைகளைத் தேடி மக்களுடன் நாம்" எனும் செயற்திட்டத்தின் ஊடாக பலாச்சோலை கிராமத்தில் மக்கள் தேவைகளை கேட்டறியும் மக்கள் சந்திப்பு நடைபெற்று இருந்தது.


தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின்





பலாச்சோலை கிராமியக் குழு தலைவர் திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது குறித்த கிராம மட்ட அமைப்புக்களினால் பல்வேறு அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்த நிலையில் பலாச்சோலை கருணை விளையாட்டு கழகத்திற்கான காணிப்பிரச்சனை மற்றும் தரம் 05 வரையான ஆரம்ப பாடசாலை உருவாக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்களினால் உடன் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. 

சந்திப்பின்போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள்  கட்சியின் போரதீவு பற்று பிரதேசக் குழு செயலாளரும், செயற்குழு உறுப்பினருமான கோபாலன் பிரசாத், இணைப்பாளர் கருணைராஜன், உட்பட கிராம மட்ட  அமைப்புக்களின் நிர்வாகிகள், கட்சியின் கிராமிய குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments