Vettri

Breaking News

விடுதலைப்புலிகளுக்கான தடையை நீடித்தது இந்தியா!!




 மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கினைத் தொடர்ந்து வளர்த்து வருவதோடு, இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகிறது என்பதால் இந்தியா, விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

விடுதலைப் புலிகள் இன்னும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு கருதுவதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

2009 மே மாதம் இலங்கையில் தோல்விக்குப் பிறகும், விடுதலைப் புலிகள் 'ஈழம்' (தமிழர்களுக்கான சுதந்திர நாடு) என்ற கருத்தை கைவிடவில்லை என்றும், நிதி சேகரிப்பு மற்றும் ஈழத்துக்காக இரகசியமாக செயல்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பரப்புரை நடவடிக்கைகள் மற்றும் எஞ்சியிருக்கும் புலிகளின் தலைவர்கள் அல்லது அங்கத்தவர்கள் சிதறிய செயற்பாட்டாளர்களை மீண்டும் ஒருங்கிணைத்து உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்த அமைப்பினை மீண்டும் எழுப்புவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

"விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள்/கூறுகள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கைத் தொடர்ந்து வளர்த்து வருவதோடு, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகின்றன.

இது இறுதியில் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீது வலுவான சிதைவை மேற்கொள்வதற்கான செல்வாக்கைக் கொண்டிருக்கும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments