அம்பாறை மாவட்டத்தில் விஷ பாம்புகளின் நடமாட்டம் அதிகரிப்பு!!
செ.துஜியந்தன்
அம்பாறை மாவட்டத்தில் விஷ பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பலர் பாம்பு கடிக்கு இலக்காகி வருகின்றனர்.
தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வசிப்பிடங்களை விட்டு குளிர்ந்த பிரதேசங்களை நோக்கி நகர்ந்து செல்கின்றன. இவ்வாறு நகரும் பாம்புகள், விஷ ஜந்துக்கள் மக்கள் குடியிருக்கும் வீடுகள் அதனையண்டிய பகுதிகள், தோட்டங்கள் ஆகியவற்றில் உள் நுழைந்து மறைந்து வாழ்கின்றன. இதனால் பொதுமக்கள் விஷ ஜந்துக்களால் தீண்டப்பட்டுவருவதோடு உயிரிழக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
அதிகளவில் இரவு வேளையில் பாம்புகள் இரைதேடி நடமாடுவது அதிகரித்துள்ளது. சிறுவர்கள், முதியோர்கள் பாம்பு கடிக்கு இலக்காகி வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களில் வசிக்கும் மக்களே விஷ ஜந்துக்களின் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். பொதுமக்கள் தங்களது வீடுகளை அண்டிய பகுதிகளை அடிக்கடி கண்காணித்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர். இவைதவிர பாம்பு கடிக்கு இலக்கான வர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி பற்றி அறிந்திருப்பதுடன் கடிபட்டவரை உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லுமாறு பிரதேச சுகாதார பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments