மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிக்கும் உபகரணங்களை வைத்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் கைது !!
சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிக்கும் உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக திறப்பனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் கவரக்குளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் என பொலிஸார் தெரிவித்தனர் .
அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.
அவர் தங்கியிருந்த வீட்டில், சட்டவிரோதமாகக் காய்ச்சப்பட்ட மதுபானம், எரிவாயு அடுப்பு, பீப்பாய், அதைக் காய்ச்ச பயன்படுத்திய செப்புச் சுருள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்
No comments