Vettri

Breaking News

பேருந்தில் பயணித்த முதியவர் திடீரென உயிரிழப்பு!




 கொழும்பிலிருந்து (Colombo) மாத்தளை (Matale) நோக்கிப் பயணித்த பேருந்தில் முதியவர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ (Nittambuwa) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (07) தம்புள்ளை (Dambulla) டிப்போவிற்கு சொந்தமான பேருந்திலேயே இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்து  இன்று நிட்டம்புவ பிரதேசத்தை அண்மித்த போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த முதியவர் சுகயீனமுற்றுள்ளார்.

உயிரிழந்த முதியவர்

பின்னர் சுகயீனமுற்ற நபரை நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து வைத்திய அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்ட போது முதியவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணித்த முதியவர் திடீரென உயிரிழப்பு! | Old Man Who Was Traveling In An Sltb Bus Died

காவல்துறையினர்  முதியவரின் சடலத்தை வட்டுப்பிட்டியால ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்த முதியவரின் விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை என்பதால் சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ காவல்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments