Vettri

Breaking News

புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடப்படும்




 சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திங்கட்கிழமை (20) மூடுவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் அலுவலம் தீர்மானித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் வானிலைக்கு ஏற்ப எதிர்வரும் நாட்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வடமேல் மாகாண பிரதம செயலாளரால், மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments