Vettri

Breaking News

கனடாவில் ஒரே நாளில் ஒரே மேடையில் “இரண்டு விருதுகள்” பெற்ற இலங்கைத்தமிழர்!!




 உதவும் பொற் கரங்களின் தலைவர் திரு. விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களுக்கு ஒரே நாளில் ஒரே மேடையில் “இரண்டு விருதுகள்”







கனடா நாட்டிலே அதிவேக வளர்ச்சியில் முன்னணியில் திகழும் பிரம்ரன் மாநகரத்தின் (City of Brampton) ஐம்பதாவது பிறந்தநாளையொட்டி(Brampton 50th Birthday Celebration) நகரத்தின் சிறந்த சாதனையாளர்களையும் மற்றும் தொண்டர் சேவையில் அளப்பெரிய பங்காற்றிய சிறந்த குடியுரிமையாளர்களையும் அடையாளம் கண்டு சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் மே மாதம் ஒன்பதாம் திகதி (May 9, 2024) அன்று பிரம்ரன் மாநகரத்தின் மையத்தில் அமைந்துள்ள றோஸ் தியேட்டரில் (Rose Main Stage, Brampton) ஆயிரக்கணக்கான விருந்தினர்கள், பார்வையாளர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் நமது மட்டுநகர் மைந்தனும், உதவும் பொற் கரங்களின் தலைவரும் (CEO, Helping Golden Hands) சமூக சேவையாளருமாகிய திரு. விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களுக்கு ஒரே நாளில் ஒரே மேடையில் அதி உயர்ந்த விருதுகளான “பிரம்ரன் ஐப்பதாவது பிறந்தநாள் சிறந்த குடியுரிமைக்கான விருது” “Best Citizen Brampton 50th Birthday Celebration Award” மற்றும் முப்பத்தைந்து வருட நீண்டகால சேவைக்கான தொண்டர் விருது (35 Years Long Services Volunteer Award” ஆகிய இரண்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை கனடாவில் மட்டுமன்றி உலகலாவியரீதியில் வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் பாராட்டு சந்தோஷ அலையினை உருவெடுத்துவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கனேடிய அரசாங்கத்தில் அதிஉயர் பதவியில் நீண்டகாலமாக பணியாற்றிவருபவரும் கனேடிய அமெரிக்கா நாடுகளின் கணக்காளர் நெறிக்கான அதிஉயர் விருதினை (FCPA) பெற்றுக்கொண்டவரும், சிரேஸ்ர ஊடகவியலாளருமான திரு. இலங்கேஸ் தருமலிங்கம் அவர்களின் பரிந்துரையின் பிரகாரம் (Nominator) இவ் உயரிய இரு விருதுகள் திரு. விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை (Nominee) அவர்களுக்கு கிடைத்தமை மிகப்பெரிய சாதனையாகும். கனடாவில் ஈழத்தமிழர்களின் சாதனைகள் நாளாந்தம் வந்துகொண்டிருக்கும்  இத்தருணத்தில் விஸ்வலிங்கம் அவர்களின் அளப்பெரிய சமூகத்தொண்டினையும் நீண்டகால தொண்டர் சேவையினையும் அங்கீகரித்து இவ் உயரிய இரண்டு விருதுகள் பிரம்ரன் மாநகரத்தால் வழங்கி கௌரவிக்கப்பட்டமை ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஓர் உலக சாதனையாக பலரும் குறிப்பாக மாநகர முதல்வர் முதல் ஏராளமான விருந்தினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பாராட்டுதல்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். சமூகத்தில் எமக்குள்ள சேவைப் பங்காளிகளுடன் சேர்ந்து, வயதில் கூடிய வயதுவந்தவர்களின் ஆலோசனையையும் பெற்றுக் கொண்டு நாம் செயல்படுவதன் மூலம், வட அமெரிக்காவில் வயதில் முதியவர்களாக மாறுவதற்கு மிகச் சிறந்த இடமாக ஒன்ராறியோ தொடர்ந்து நிலைத்திருப்பதை உறுதிசெய்ய முடியும் என்று திடமாக தாங்கள் நம்புவதாக விஸ்வலிங்கம் இரண்டு விருதுகளை பெற்றபின் ஊடகத்தினரிடமும் பொதுமக்களிடமும் தெரிவித்தார்கள்.

செ.துஜியந்தன்

No comments