Vettri

Breaking News

பெண்கள் மேலாடையின்றி நீந்துவதற்கு அனுமதி!!




 பெர்லின் நகர அதிகாரிகளின் அனுமதியைத் தொடர்ந்து பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி நீந்துவதற்கு விரைவில் அனுமதிக்கப்படவிருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள நீச்சல் குளத்தில் சமீபத்தில் இளம்பெண் ஒருவர் மேலாடையின்றி குளித்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து பலரும் புகார் அளித்த நிலையில், இந்த நீச்சல் குளத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு பெண் சட்ட நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் அளித்த முறைப்பாட்டில், நீச்சல் குளத்தில் ஆண்களைப்போலவே பெண்களும் மேலாடை இல்லாமல் குளிக்கலாம். ஆண்களுக்கு ஒரு நீதி பெண்களுக்கு ஒரு நீதியா? என அவர் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம் அவரை வெளியேற்றியது தவறு என்று கூறியுள்ளது. இதனையடுத்து பெண்கள் மேலாடையின்றி குளிக்க சம்பந்தப்பட்ட நீச்சல் குளம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தற்போது பல நாடுகள் தங்களின் எதிர்ப்புக்களை பதிவு செய்து வருவதையும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக கண்டறிய முடிகின்றது.

மேலும், கலாசார விழுமியங்களை கடைப்பிடிக்கும் நாடுகளில் இவ்வாறான விடயங்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டதாகவே காணப்படுகின்றது. ஆகவே அவ்வாறான நாடுகள் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் கிழம்பியுள்ளன.

இது குறித்து உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், “இளம்பெண் ஒருவர் இங்குள்ள நீச்சல் குளத்தில் மேலாடையின்றி குளித்திருக்கிறார். பின்னர் அதே நீச்சல் குளத்தில் “சன் பாத்” எடுத்திருக்கிறார்.

ஆனால், அவர் இதற்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். எனவே, அப்பெண் நீதிமன்றத்தை நாட, பாலின பாகுபாடுகள் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே பெர்லினில் உள்ள நீச்சல் குளங்களில் பாலின பாகுபாடு இல்லாமல் இருக்க புதிய உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்பட இருக்கிறது. இவை கடந்த ஆண்டு வந்த உத்தரவு” என்று கூறியுள்ளார்.

விரைவில் பெர்லினில் உள்ள அனைத்து நீச்சல் குளங்களிலும் இந்த அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

No comments