Vettri

Breaking News

நான் ஜனாதிபதியானவுடன் தமிழர்களுக்குத் தீர்வு : சஜித்




 "நான் ஜனாதிபதியாக வந்தவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கியே தீருவேன்." என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் உரிமைகளுக்காக நான் என்றுமே குரல் கொடுத்து வருகின்றேன்.

நான் ஜனாதிபதியானவுடன் தமிழர்களுக்குத் தீர்வு : சஜித் | Solution For Tamils When I Become President Sajith

நான் ஜனாதிபதியாக வந்தவுடன் அவர்களுக்கான உரிமைகளை - அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கியே தீருவேன்.

இன, மத பேதமின்றி அனைத்து மக்களுக்காகவும் என் சேவை தொடரும்." - என்றார்.

No comments