ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி!
இந்த ஆண்டு முதல் தடவையாக சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 இற்கு கீழ் வீழ்ச்சியடைந்ததன் மூலம் இலங்கை சுற்றுலாத்துறை ஏப்ரல் மாதத்தில் வேகமான வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மொத்தம் 148, 867 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்(SLTDA) தற்காலிகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட 41 சதவீதம் அதிகமாக இருந்தாலும் மார்ச் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 209,181 சுற்றுலாப் பயணிகளின் வருகையை விட இது குறைவாகும்.
சுற்றுலாப் பயணிகள்
டிசம்பர் 2023 முதல் இலங்கை ஒவ்வொரு மாதமும் 200,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் வெற்றிகரமாக இருந்த நிலையில் இது கொரோனா தொற்றுநோய் வெடித்ததில் இருந்து முதல் முறையாக மைல்கல்லை எட்டியது.
இந்த வேகம் நான்கு மாதங்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் ஒரு சுருக்கம் காணப்பட்டது இருப்பினும் ஒரு சுருக்கம் எதிர்பார்க்கப்பட்டாலும் சுற்றுலா அதிகாரிகள் கடந்த வாரம் வீழ்ச்சிக்கு பிற காரணிகளும் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏப்ரல் 17 முதல் நடைமுறைக்கு வந்த புதிய விசா முறையானது மிகவும் விலை உயர்ந்ததுடன் முன்பு இருந்த ETA போல வசதியாக இல்லாததால் அது வெளியிடப்பட்டதிலிருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments