யாழில் வெளிநாட்டவரின் காணி மோசடி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியான முறையில் ஈடு வைத்து பணம் பெற்ற நபர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் காவல்துறையினரால் (Jaffna police) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நீதிமன்றில் முன்னிலை
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியின் உறுதியை பதிவு ஒன்றுக்காக தனது உறவினர் ஒருவரிடம் கையளித்துள்ளனர்.
குறித்த நபர் அக்காணி உறுதி பத்திரத்தை உள்ளூரில் நபர் ஒருவரிடம் 12 இலட்ச ரூபாய்க்கு ஈடு வைத்து பணம் பெற்றுள்ளார்.
இது தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கமையை கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments