ஐ.பி.ல் தொடரின் பிளே ஓவ் சுற்று இன்று ஆரம்பம்!!
இந்திய பிரீமியர் லீக் தொடரின் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இன்று (21) பிளோ ஓப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. முதல் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் அஹமதாபத்தில் மோதவுள்ளன.
எட்டு வாரங்கள் நீடித்த ஐ.பி.எல். ஆரம்ப சுற்றில் நடந்த 70 போட்டிகளை தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த முறையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பிளே ஓப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளன.
இதில் முதல் இரு இடங்களை பிடித்த அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஓப் போட்டி தகுதிகாண் ஆட்டமாகவே நடைபெறுகிறது. இதில் தோற்கும் அணிக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் நாளை அஹமதாபாத்தில் நடைபெறும் இரண்டாவது பிளே ஓப் ஆட்டம் நொக் அவுட் போட்டியாகவே இடம்பெறும். ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் தோற்கும் அணி வெளியேறுவதோடு வெற்றி பெறும் அணி முதல் தகுதிகாண் போட்டியில் தோற்ற அணியுடன் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) பலப்பரீட்சை நடத்தும்.
இரண்டாவது தகுதிகாண் போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதோடு ஐ.பி.எல். இறுதிப் போட்டி எதிர்வரும் மே 26 ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது.
No comments