Vettri

Breaking News

காலியில் வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!




 காலி (Galle)- ஊரகஸ்மன்ஹந்திய காவல்துறை பிரிவிற்குட்பட்ட களுவலகொட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஊரகஸ்மன்ஹந்திய காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

50 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

சில நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும், வீட்டின் படுக்கையில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலியில் வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! | Woman S Body Recovered From A House

விசாரணையில் குறித்த பெண் வீட்டில் தனியாக இருப்பதும், கணவர் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஊரகஸ்மன்ஹந்திய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments