முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்த பெண்களுக்கு ஏற்பட்ட அநீதி : கொதித்தெழுந்த சிங்கள சமூகம்
திருகோணமலை(Trincomalee) - சம்பூர் பகுதியில், முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்த பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களையும் பொலிஸாரின் இதுபோன்ற நடவடிக்கைக்கு தங்களது எதிர்ப்புக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
தமிழ் சமூகம் மாத்திரம் இன்றி சிங்கள தரப்பினரும், சமூக செயற்பாட்டாளர்களும் இந்த சம்பவத்திற்கு தங்களது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
பொலிஸாரின் இது போன்ற அராஜக செயற்பாடுகள் தொடரும் எனில், முழு நாடும் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பினை தெரிவிப்போம் என்று பெரும்பான்மை இன பெண்மணி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், பலர் இவ்வாறு தங்களது உளக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
No comments