நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் கைது: வெளியான காரணம்
நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஏ.எச்.எம்.பௌசியின் மகனை கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வாகன விபத்தொன்றை ஏற்படுத்திவிட்டு பாதிப்படைந்தவரை தாக்கியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
கொள்ளுப்பிட்டி பாடசாலை மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபரான ஏ.எச்.எம்.பௌசியின் மகனைக் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர்.
No comments