யாழில் இராணுவத்தினரை கிண்டலடித்து சமூகவலைத்தளத்தில் காணொளி பதிவு:சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞன்
யாழில்(jaffna) இளைஞர் ஒருவர் இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து பகுதியளவில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்து கடமையில் நின்ற இராணுவத்தினரை காணொளி எடுத்து கிண்டலடித்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளைஞன் பலாலி(Palali) வடக்கு பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்து இராணுவ முகாமில் கடமையில் நின்ற இராணுவ வீரரை காணொளி எடுத்தது மட்டுமன்றி “டுப்பு டுப்புனு சுடுறீனங்களா? உண்மையான துவக்கா” என கிண்டலடித்துள்ளார்.
உரிய நடவடிக்கை
இவ்வாறு கடமையில் இருக்கும் ஒரு இராணுவத்தினரை காணொளி எடுத்து நக்கலடித்து அதனை சமூக ஊடகத்தில் பகிர்ந்தமை தொடர்பில் பலரும் தமது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு பல யூரிப்பர்ஸ் சட்ட வரையறைகளை மீறி பல இடங்களுக்குள் அத்துமீறி சட்டவிரோதமாக உள்நுழைவதும், வெளிநாட்டு நிதிகளை சட்டவிரோதமாக கையாளுவதுமாக பாரதூரமான குற்றங்களை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வாறு சட்ட வரையறைகளை மீறுபவர்கள் தொடர்பில் உரியவர்கள் கவனம் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments