அகில இலங்கை மருத்துவர் சமூக மக்கள் பேரவையின் உழைப்பாளர் மாநாடு!!
அகில இலங்கை மருத்துவர் சமூக மக்கள் பேரவை' யினரின் முதலாவது உழைப்பாளர் மாநாடு அமைப்பின் தலைவர் கவிஞர் தமிழ்விந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது .
இம்மேதினத்தில் 'ஒற்றுமையே எமது பலம் உறவுகளை ஒன்றிணைப்போம் எனும் தொனிப்பொருளில் இத் தொழிலாளர் தினம் நடைபெற்றது .இந்நிகழ்வில் அமைப்பின் பொருளாளர் எஸ். லவகுமார்
பல்கலைக்கழக பேராசிரியரகள், மருத்துவ நிபுணர்கள், அரச அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஒப்பனையாளர் சங்கங்களின் தலைமைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுச் செயலாளர், மாவட்ட இணைப்பாளர்கள், ஆலோசகர்கள் உட்பட பலரும் பங்குபற்றினர்.
இம்மாநாட்டில் பின்வரும் தீர்மானங்களும் முன்மொழியப்பட்டன
1. நாடு புராகவுமுள்ள உறவுகளை ஒன்றிணைத்தல்
2. சமூகத்தினருக்கான தொழில் உரிமையினை உறுதிப்படுத்தல்
3. கல்வியில் சம அந்தஸ்தினை கிடைக்கச் செய்தல்
4. அரச பதவிகளிலும் சம அந்தஸ்தினை கிடைக்கச் செய்தல்
5. அரசியல் சபைகளில் இட ஒதுக்கீடு போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செ.துஜியந்தன்
No comments