பிரசவத்தின்போது மகப்பேற்று மருத்துவ நிபுணர் உயிரிழந்த சோகம்
இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் மகப்பேறு மருத்துவர் பிரசவத்தில் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த அஞ்சுதா (வயது 26) என்ற மகப்பேற்று மருத்துவரே உயிரிழந்தவராவார்.
மருத்துவர் அஞ்சுதாவுக்கு நேற்று முன்தினம் மாலை பிரசவ வலி ஏற்பட்டது. மூச்சுத்திணறலும் அதிகமானது. இதையடுத்து சிகிச்சைக்காக, அவர் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அஞ்சுதாவுக்கு தீவிர சிகிச்சை
அங்கு மருத்துவர்கள் அஞ்சுதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அஞ்சுதாவுக்கு அறுவை சிகிச்சையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், அவருக்கு கருப்பை குழாயில் இரத்தப்போக்கு அதிகரித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.
பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
2 குழந்தைகளும் திருச்சி தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டன.
பல தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்த மகப்பேற்று மருத்துவ நிபுணர், தான் பணிபுரிந்த மருத்துவமனையிலேயே பிரசவத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments