சாதாரண தர பரீட்சையில் தோற்றும் மாணவன் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு
நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் ( G.C.E (O/L) examination) தோற்றும் மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் கட்டுகஸ்தோட்டை (Katugastota) காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஜம்புகஹபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வத்தேகம கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வந்த 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் தனது அறையில் உள்ள மின் இணைப்பிற்கு பயன்படுத்தப்படும் வயரில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை காவல்துறை நிலைய பிரதான பரிசோதகரின் அறிவுறுத்தலின்படி மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
No comments