வீதிகளில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தி கொள்ளையிடும் மோட்டார் சைக்கிள் கும்பலின் செலுத்துனர் கைது!
மேல் மாகாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பொதுமக்களிடம் மன்னா கத்தியைக் காண்பித்து அவர்களை அச்சுறுத்தி கொள்ளையிடும் மோட்டார் சைக்கிள் கும்பல் ஒன்றின் செலுத்துனர் மொரட்டுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த கும்பலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான “மன்னா சமந்த” என்பவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments