எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி கால்வாயில் வீழ்ந்து விபத்து!
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரக்காபொல பகுதியில் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (7) இரவு இடம்பெற்றுள்ளது.
கண்டியிலிருந்து கொழும்புக்கு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. லொறியின் சாரதி உறங்கியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின்போது லொறியானது வீதியில் இருந்த மின்கம்பத்துடன் மோதி அருகிலிருந்த கால்வாயில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த லொறி சாரதி மற்றும் உதவியாளர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments