மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!!
தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக மழை நீடிப்பதால், மறு அறிவித்தல் வரை மன்னார் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில், கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
No comments