இலங்கையின் மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு
இலங்கையின் மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி வீதத்தை அதிகரிப்பது தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு நிதியமைச்சில் கூடிய போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப வட்டி விகிதத்தை எவ்வளவு அதிகரித்து அதற்கேற்ப செயல்பட முடியும் என அமைச்சர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
வட்டி வகிதம்
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சொந்தமான சுமார் 11 லட்சம் கணக்குகள் உள்ளதாகவும், அவற்றை முறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக, ஒரே நபர் பல வங்கிக் கணக்குகளை பராமரித்து வருவது, அந்தக் கணக்குகளில் பிற தரப்பினரின் பணத்தை வைப்பு செய்வது போன்றவை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
No comments