Vettri

Breaking News

கிரிக்கெட் மட்டையால் தாக்கி மாணவன் படுகொலை




 பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மாணவர் ஒருவரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக கூறப்படும் மற்றுமொரு மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டி Monte Cristo தோட்டத்தின் கீழ் பகுதியைச் சேர்ந்த Stanley Steph Phil என்ற பதின்மூன்று வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கிரிக்கெட் மட்டையால் ஏற்பட்ட வாக்குவாதம் 

இரு மாணவர்களும் பாடசாலை நண்பர்கள் எனவும், இருவரும் கடந்த 23ஆம் திகதி தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற போது, ​​கிரிக்கெட் மட்டையால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மற்றைய மாணவர் சக மாணவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கிரிக்கெட் மட்டையால் தாக்கி மாணவன் படுகொலை | A Student Was Killed By A Cricket Bat

பலத்த காயமடைந்த மாணவன் 

இதில் பலத்த காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (29) உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். 

கிரிக்கெட் மட்டையால் தாக்கி மாணவன் படுகொலை | A Student Was Killed By A Cricket Bat

No comments