Vettri

Breaking News

யாழில் குழந்தையின் சத்திர சிகிச்சைக்கு பணம் கேட்ட வைத்தியசாலை: காப்பாற்றிய தமிழ் வைத்தியர்




 தலை வீக்கம் வருத்தம் உடைய குழந்தைக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் பணம் கேட்கப்பட்டதாகவும் யாழை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவர் தமது குழந்தையை சத்திரசிகிச்சை இன்றி காப்பாற்றியதாகவும் தாயார் ஒருவர் கூறியுள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,குழந்தை பிறப்பதத்திற்கு முன்னர் வைத்தியசாலையின் அறிவுறுத்தலின் படி நான் சில மருந்துகளை குடித்தேன். காலில் ஏற்பட்ட தோல் நோய்க்கும் மருந்து குடித்தேன்.

அறுவை சிகிச்சை மூலமே நான் குழந்தையை பெற்றெடுத்தேன். குழந்தை பிறந்த 11 நாட்களில் மூளை காய்ச்சல் வந்தது. அதனால் 21 நாட்கள் வைத்தியசாலையில் இருந்தோம்.

யாழில் குழந்தையின் சத்திர சிகிச்சைக்கு பணம் கேட்ட வைத்தியசாலை: காப்பாற்றிய தமிழ் வைத்தியர் | Jaffna Teaching Hospital Issue Tamil Doctor  

இதன்போது குழந்தையின் தலையை ஸ்கேன் செய்து, முதலில் தலையில் சளி என கூறினார்கள் பின்னர் ரத்த கசிவு என்றனர். பின்பு தொடர்ச்சியாக கிளினிக் சென்று குழந்தையின் தலை வளர்ச்சி அளக்கப்பட்டது.

இதன்பின் குழந்தையின் தலையில் நீர் கோர்வை இருப்பதாகவும் மூளையிலிருந்து வெளியேற வேண்டிய நீர் தடைபட்டுள்ளதாகவும் கூறினார்கள். இதற்கான சத்திரசிகிச்சைக்கு 135000 காசு கேட்டார்கள் என கூறியுள்ளார்.

பெற்றோர்கள் தான் பொறுப்பு

இதேவேளை சாத்திரசிகிச்சையின் பின்னர் குழந்தை இறந்தால் அதற்கு பெற்றோர்கள் தான் பொறுப்பு என கூறியதாகவும் தாய் கவலை தெரிவித்துள்ளார்.

யாழில் குழந்தையின் சத்திர சிகிச்சைக்கு பணம் கேட்ட வைத்தியசாலை: காப்பாற்றிய தமிழ் வைத்தியர் | Jaffna Teaching Hospital Issue Tamil Doctor

இதன்பின்னர் யாழ்ப்பாணம், உரும்பிராயை சேர்ந்த கதிர்வேலு ரகுராம் என்ற தமிழ் வைத்தியரிடம் சிகிச்சை பெற்று குழந்தை தற்போது நலமாக உள்ளதாகவும் குழந்தையின் தலை பெருக்கும் வருத்தமும் குறைந்துள்ளதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ் வைத்தியர் கதிர்வேலு ரகுராம் கூறுகையில்,குழந்தை வயிற்றில் இருக்கும் போது தாய்க்கு கொடுத்த மருந்து மற்றும் குழந்தை பிறந்த உடனே தடுப்பூசி செலுத்தியமையே குழந்தையின் இந்த வருத்தத்திற்கு காரணம் என கூறியுள்ளார்.

தாய் அருந்திய மருந்தின் தாக்கம் குழந்தையின் சிறுநீரகத்தை பலவீனம் படுத்தியுள்ளது. இதனால் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு மாத குழந்தையுடன் என்னிடம் வந்தார்கள் இப்போது 6 மாத குழந்தையாக அவர் நலமாக உள்ளார்.அவருடைய தலை வீக்கம் 85 சதவீதம் குறைந்துள்ளது என கூறியுள்ளார்.

யாழில் குழந்தையின் சத்திர சிகிச்சைக்கு பணம் கேட்ட வைத்தியசாலை: காப்பாற்றிய தமிழ் வைத்தியர் | Jaffna Teaching Hospital Issue Tamil Doctor

நான் பல்ஸ் பார்த்து முதலில் எந்த உடல் பகுதி பலவீனமாக உள்ளது என தெரிந்துகொண்டு சிகிச்சை அளித்தேன். எல்லா வருத்தங்களும் கத்தியை எடுத்து சத்திரசிகிச்சை செய்ய கூடாது.

பொதுவாக உடல் சார்ந்த நோய்களின் போது அதன் ஆணிவேரை அறிய வேண்டும். அந்த ஆற்றல் நவீன மருத்துவத்திற்கு இல்லை.

இந்த குழந்தை தற்போது நலமாக இருப்பதை அறிந்து குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வருமாறும் வைத்தியசாலையில் கொடுக்கப்பட்ட குறிப்பு புத்தகத்தை கேட்பதாகவும் தாய் கூறினார்.இதற்கு காரணம் அவர்கள் எழுதிய விபரங்களுடைய இந்த குறிப்பு புத்தகம் எங்களுடைய ஆதாரம் அதை அழிப்பதற்கே இந்த தடுப்பூசி முயற்சி என வைத்தியர் கூறியுள்ளார்.

No comments