அதிபர் தேர்தல் : ஆதரவு தளத்தில் அனுரவை முந்தும் சஜித்
.நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் செல்வாக்கு மார்ச் மாதத்தில் 2 வீதத்தால் அதிகரித்துள்ளது.
எனினும், தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் செல்வாக்கு 2 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் மாதத்திற்குள் ஏற்பட்ட மாற்றம்
இதன்படி மார்ச் மாதத்திற்குள் 44 வீதமானவர்கள் அனுரகுமாரவுக்கும் 41 வீதமானவர்கள் சஜித் பிரேமதாசவுக்கும் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
ரணிலுக்கான ஆதரவு
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 8 வீதமான மக்களின் அங்கீகாரம் உள்ளதுடன், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் முன்நிறுத்தப்பட்டால், 7 வீதமான மக்கள் அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
No comments