திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில்(ATI) HND IT கற்கைநெறி இடைநிறுத்தப்பட்ட விவகாரம்
திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில்(ATI) HND IT கற்கைநெறி இடைநிறுத்தப்பட்ட விவகாரம்
அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுசென்ற தௌபீக் எம்.பி..!
திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில்(ATI) HND IT கற்கைநெறி இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் தமது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதுடன், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன்.
இன்று (04) திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவன மாணவர் குழு திருகோணமலை மாவட்ட பாராளுயன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்யை சந்தித்து அவரது கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதன்பிரகாரம் கல்வி அமைச்சின் செயலாளருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியதையடுத்து கற்கைநெறியை தொடர்ந்து நடத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சின் செயலாளர் உறுதியளித்தார்.
No comments