Vettri

Breaking News

இலங்கையின் 96 லெஜெண்ட்ஸ் அணியினர் பங்குபற்றிய கிரிக்கெட் சுற்றுப்போட்டி




 1996 ஆம் ஆண்டுஇலங்கைக்கு உலக கிண்ணத்தை சுவீகரிக்க காரணமாக இருந்த அர்ஜூன ரணதுங்க தலைமையிலான அணியினரின் சினேகபூர்வ போட்டிகள் நேற்றுமுன்தினம் கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.


இலங்கையில் வாழும் இந்திய சமூகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டியில் ( 1St Inter -Indian Association Cricket Tournament)இலங்கையில் வசிக்கும் இந்திய சமூகத்தின் பிரதிநிதிகள் இந்த போட்டிகளில் 6 அணிகளாக கலந்துகொண்டனர்.

இந்த போட்டிகளின் பிரதம விருந்தினராக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சன்தோஷ்.ஜா ( Mr.Santhosh Jha) கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது இந்திய நாட்டை பொறுத்தவரையில் கிரிக்கட் மக்களுடைய வாழ்க்கையில் பிணைக்கபட்டதொன்று என்றும் போட்டிகளின் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் காணப்படும் உறவு என்பது மிகவும் போற்றத்தகது என்று அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக இறுதிப்போட்டியில் வெற்றிக் கொண்ட அணியுடன் அர்ஜூன ரணதுங்க, அரவின்த டி சில்வா, நுவான் சொய்சா, உள்ளிட்ட இலங்கையின் நட்சத்திர வீரர்கள் விளையாடியதுடன் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்து இலங்கையின் கிரிக்கெட் பெயரினை பதிவு செய்திருந்தனர்.

மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்காக வெற்றி கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments