வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் கைது!!
வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் கைது
வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா குருமன்காடு பகுதியில் மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன் தலைமையிலான பொலிசார் இன்று (28.05) மாலை விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டனர்.
இதன்போது இளைஞர் ஒருவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வியாபார நோக்கில் குறித்த போதை மாத்திரைகளை வவுனியா, குருமன்காடு பகுதிக்கு கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
No comments