பிரமாண்டமாக நடக்கவிருக்கும் இந்தியன் 2 ஆடியோ லான்ச்!! யார் சிறப்பு விருந்தினர் தெரியுமா?
இந்தியன் 2
உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் தயாராகி வரும் இந்தப் படத்துக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
ஆடியோ லான்ச்
இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூன் 13ம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் இந்த மே மாதத்தில் இந்தியன் 2 படத்தின் ஆடியோ லான்ச் ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் தலைமை விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் ராம்சரண் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
No comments