Vettri

Breaking News

170,000kg மனித பாவனைக்குத் தகுதியற்ற அரிசி மீட்பு!!




 மனித பாவனைக்குத் தகுதியற்ற சுமார் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோ அரிசியை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நுகர்வோர் அதிகார சபையின் அனுராதபுரம் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று முன்தினம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோ அரிசியை 08 லொறிகளில் தனியார் அரிசி ஆலைக்கு கொண்டு

சென்று, மீண்டும் பொதி செய்து கொண்டிக்கையில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 30 இல், காலாவதியாகியிருந்த காலாவதித் திகதி அடுத்த 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது.கையகப்படுத்தப்பட்ட அரிசி சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அரிசி ஆலையின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments