15 ஆம் நினைவு நாளை முன்னிட்டு வவுனியாவில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைப்பு!!.
முள்ளிவாய்கால் 15 ஆம் நினைவு நாளை முன்னிட்டு வவுனியாவில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த கஞ்சி நகரசபை பொங்கு தமிழ் நினைவு தூபி முன்பாக ஞாயிற்றுக்கிழமை (12) வழங்கி வைக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மக்கள் முள்ளிவாய்கால் கஞ்சியினை உணவாக உட்கொண்டே உயிர் பிழைத்தனர். அதனை நினைவு கூர்ந்து அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை கடத்தும் நோக்குடன் இவ்வாறு கஞ்சி வழங்கப்பட்டது.
வீதியால் சென்ற பலரும் அதனை வாங்கி பருகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
No comments