Vettri

Breaking News

Goat படத்தில் நடித்துள்ள CSK வீரர்கள்.. சர்ப்ரைஸ் தகவல் கூறிய நடிகர்




Goat 

தளபதி விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து Goat படத்தின் இரண்டாவது பாடல் ஜூன் மாதம் வெளியாகும் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

Goat படத்தில் நடித்துள்ள CSK வீரர்கள்.. சர்ப்ரைஸ் தகவல் கூறிய நடிகர் | Csk Players Acted In Vijay Goat Movie

இந்த நிலையில், Goat திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகர் அஜ்மல், இப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவலை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

Goat படத்தில் சி.எஸ்.கே வீரர்களா

அதில் "சி.எஸ்.கே அணியில் விளையாடும் மூன்று வீரர்கள் Goat திரைப்படத்தில் நடித்துள்ளதாக கேள்வி பட்டோம், அது உண்மையா?" என கேள்வி எழுப்பினார்கள். இதற்கு "அதை என்னால் கூறமுடியாது, தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு தான் கூறவேண்டும்" என சொல்லி முடித்துவிட்டார்.

Goat படத்தில் நடித்துள்ள CSK வீரர்கள்.. சர்ப்ரைஸ் தகவல் கூறிய நடிகர் | Csk Players Acted In Vijay Goat Movie

அவர் அப்படி எதுவும் இல்லை என கூறாமல், அதை பற்றி நான் சொல்ல முடியாது என்று கூறியதால், சி.எஸ்.கே அணியில் இருந்து மூன்று வீரர்கள் Goat படத்தில் நடித்திருக்கிறார்கள் என வெளிவந்த தகவல் உண்மை தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து தயாரிப்பு தரப்பிலிருந்து எப்போது அறிவிப்பு வெளிவரப்போகிறது என்று.

Goat படத்தில் நடித்துள்ள CSK வீரர்கள்.. சர்ப்ரைஸ் தகவல் கூறிய நடிகர் | Csk Players Acted In Vijay Goat Movie

No comments