இரண்டு ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதி கோர விபத்து
மலேசிய கடற்படைக்குச் சொந்தமான இரு ஹெலிகொப்டர்கள் நடுவானில் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இக்கோர விபத்தில்
இரண்டு ஹெலிகொப்டர்களும் கீழே விழுந்து நொருங்கியதில் ஹெலிகொப்டர்களில் பயணம் செய்த 10 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலேசிய கடற்படையின் 90ஆம் ஆண்டு நிகழ்வுக்கான ஒத்திகையின் போதே இந்த விபத்து ஏற்பட்டது.
நேற்றுக் காலை 09 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த இரு ஹெலிகொப்டர்களும் மோதி விபத்துக்குள்ளானது. உயிரிழந்தவர்களில் ஒரு இந்தியரும் அடங்குவதாக தெரிய வருகின்றது.
HOM மற்றும் FENNEC ரக ஹெலிகொப்டர்களே ஒன்றோடனொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தைத் தொடர்ந்து உடல்களை மீட்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. .
No comments