Vettri

Breaking News

பாசிக்குடா கடலில் நீராடச் சென்றவர் மாயம் ; தேடும் பணிகள் தீவிரம்!





 கல்குடா - பாசிக்குடா கடலில் நீராடிக் கொண்டிருந்த நபர்களில் ஒருவர் மாயமாகியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த குழுவினர் ஒன்று சேர்ந்து நீராடிக் கொண்டிருந்த போதே அதில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இவ்வாறு காணாமல் போன நபரை கல்குடா டைவர்ஸ் அணியினர் நேற்று 3 மணிநேரம் தேடியும் அந்நபர் கிடைக்கவில்லை.

காணாமல் போன நபரை தேடும் பணிகள் இன்றும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments