களுத்துறை சிறைச்சாலையில் தமிழ், சிங்கள புத்தாண்டு நிகழ்வு
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு களுத்துறை சிறைச்சாலை ஒழுங்கு செய்த சிறைக்கைதிகளை மகிழ்வூட்டும் நிகழ்வு (21) ஞாயிற்றுக்கிழமை சிறைக்கைதிகளின் நலன்புரி அமைப்பின் உதவியுடன் சிறைச்சாலை வளாகத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
களுத்துறை சிறைச்சாலை சிரேஷ்ட அத்தியட்சகர் ரோஹன கலப்பத்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறைச்சாலை கைதிகளின் மன நிலையை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு மேடையேற்றப்பட்டமை விசேட அம்சமாகும். இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள், நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பேருவளை தொகுதி திடீர் மரண விசாரணை அதிகாரியும் நலன்புரி அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவருமான நஸ்ரின் நஸீர் ஆகியோரும் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
No comments