உலகமெங்கும் சமத்துவமும், சகோதரத்துவமும் மேலோங்க பிரார்த்திப்போம்' - எம். எஸ் தௌபீக் எம்.பி!!
(எஸ். சினீஸ் கான் - ஊடக செயலாளர்)
உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம் எஸ் தௌபீக் அவருடைய பெருநாள் வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில் குறிப்பிடுகையில்,
புனித ரமழான் நோன்பை நோற்று நல்லமல்களில் விழித்திருந்து வணங்கி இன்று பெருநாளை அடைந்திருக்கிறோம். இறை அச்சத்தோடு இவ்வருட நோன்பை எதிர்கொண்டு, நமது ஈமானை இந்த மாதத்தில் பலப்படுத்திக் கொண்டோம்.
பலப்படுத்திக் கொண்ட உள்ளங்களை இன்றைய தினத்தோடு விட்டுவிடாது வாழ்நாள் பூராகவும் செயற்படுத்திக் கொள்ள முயற்சி செய்வதோடு, ஏழை எழியோருக்கு முடியுமான உதவிகளை வழங்குவோம்.
அதேபோன்று பலஸ்தீனில் எமது உடன்பிறப்புக்கள் படும் இன்னல்களை புரிந்து, அவர்களின் சுபீட்சத்திற்காகவும் அங்கு நிரந்தர அமைதி நிலவவும் இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம்.
உலகு எங்கும் சமத்துவமும், சகோதரத்துவமும் மேலோங்கட்டும் என பிரார்த்தித்தவனாக உலக வாழ் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
No comments