களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது
களுத்துறை , பின்வத்த பிரதேசத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துக்கு உதவியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கினிமெல்லகஹ பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments