Vettri

Breaking News

மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்: பொலிஸார் அறிவிப்பு






சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (01) கொழும்பு நகரை சுற்றி பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளமையினால் விசேட போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நாளை 40 பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

19ஆம் திகதி மே தினக் கொண்டாட்டங்களும் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரை சுற்றி பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதையடுத்து இந்த விசேட போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர்.


ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!*

No comments