தமிழரசுக்கட்சியில் புதிய தேர்தல் நடந்தால் தலைவர் புதியவர்
தமிழரசுக் கட்சியில் புதிய தேர்தல் நடந்தால் தலைவராக புதியவர் தெரிவு செய்யப்படுவார் என அமெரிக்காவின் சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சிறீதரன் தற்போது நிலவும் அரசியல் பிரச்சினைகளை தீர்த்து மீண்டும் தேர்தல் நடத்தும் பட்சத்தில் சிறீதரன் தலைவராக தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்பு இல்லை எனவும், வாக்கு வித்தியாசத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியில் புதிய தேர்தல் நடந்தால் தலைவராக சுமந்திரன் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதுடன், பழைய போட்டியாளர்கள் விலகி, புதிய வேட்பாளர்கள் பலர் தேர்தலில் குதிக்கும் நிலை உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதாவது சுமந்திரன் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி தென்னிலங்கை அரசியல்வாதிகளுடன் இணையும் பட்சத்தில் அவருக்கு முக்கிய அமைச்சு பதவியொன்று வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழரசுக்கட்சியில் நிலவும் அரசியல் பிரச்சினை காரணமாக சுமந்தரன் தொடர்பில் நிலவும் விமர்சனங்களால் அவர் இதுவரை பாதிக்கப்படவில்லை எனவும், அவர் ஒரு பலமாக ஆளுமைமிக்க அரசியல்வாதி என்றும் கூறியுள்ளார்.
No comments