Vettri

Breaking News

யாழ். அளவெட்டியில் எரி காயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு!




 


யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் வியாழக்கிழமை (25) மாலை  மீட்கப்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை வேளை அவரது மகள் வெளியே சென்றிருந்தார். இதன்போது குறித்த முதியவர் பீடி புகைப்பதற்கு முயன்றவேளை படுகாகையில் தீப்பற்றி, தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

No comments