மற்றுமொரு விமான சேவை ஆரம்பம்: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கைக்கும் கஸகஸ்தானுக்கும் இடையில் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கஸகஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் விமான மற்றும் வழிசெலுத்தல் அதிகாரிகளுக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட 13.5.2015 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எனினும், இந்த விமான சேவை ஒப்பந்தம் இதுவரை கையெழுத்திடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
முன்மொழியப்பட்ட விமான ஒப்பந்தத்தின் கீழ், இலங்கையில் எங்கிருந்தும் கஸகஸ்தானின் அஸ்தானா அல்லது அல்மாட்டிக்கு குறிப்பிட்ட வழித்தடங்களில் வாரத்திற்கு ஏழு விமானங்களை இயக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இதன்படி, இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்ட விமான சேவை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments