யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இருவர் கைது
மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் பாலை மற்றும் முதிரைகுற்றிகள் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை யாழ் மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெட்டப்பட்டு முத்திரை மற்றும் பாலை மர தீராந்திகள் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு கொண்டுவரப்பட்டதாக வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனடிப்படையில் திணைக்களத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நேற்று முன்தினம்(27) மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
மேலதிக விசாரணை
இதன் பொழுது 30 முதிரை மரகுற்றிகள் மற்றும் 33 பாலை மர தீராந்திகளுடனும் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தனர்.
கைது செய்யபட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments