Vettri

Breaking News

ஓடும் தொடருந்தில் ஏற முற்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கதி! கொழும்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்




 ஓடும் தொடருந்தில் ஏற முற்பட்ட இரண்டு பெண்கள் இரண்டு தொடருந்து பெட்டிகளுக்கு இடையில் சிக்கி கொண்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி நோக்கிச் செல்லும் கொழும்பு தொடருந்து, நேற்று மாலை 4:35 மணியளவில், பயணிகள் ஏறுவதற்காக நிறுத்தப்பட வேண்டிய கொழும்பு கோட்டை நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது,தொடருந்து நிறுத்துவதற்கு முன்பே அதில் ஏற முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடும் தொடருந்தில் ஏற முற்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கதி! கொழும்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Train Accident In Sri Lanka


விபத்தில் சிக்கிய இரு பெண்களும் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

தொடருந்து பெட்டிகளுக்கு இடையே இருந்து பெண்களை விடுவிப்பதற்காக கோட்டை நிலையத்தில் மக்கள் மற்றும் தொடருந்து திணைக்கள ஊழியர்கள் இணைந்து ஒரு பெரிய மீட்பு முயற்சியை மேற்கொண்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது

No comments