ரஜினியின் கூலி படத்தின் ட்ரைலரை கிண்டல் செய்தாரா வெங்கட் பிரபு?..அவரே கொடுத்த விளக்கம்..
கார்த்திக்
தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் கார்த்திக்.
சமீபத்தில் இவர், சினிமா படங்களின் ட்ரைலர்களை கிண்டல் அடித்துவீடியோ பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில், தற்போது வரும் படங்களின் ட்ரைலர், அவன் வரப்போறான்.. அதோ வரான்.. அவன் வந்துட்டான்.. என்ற ரகத்தில் இருக்கிறது. அதன் பின் நடிகர்களின் பழைய படங்களின் வசனங்களை எடுத்து வைக்கிறார்கள் என கார்த்திக் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்து இருக்கிறார்.
ரஜினிகாந்தின் கூலி படத்தின் ட்ரைலரை தான் கார்த்திக் கிண்டல் செய்கிறார். அதற்கு வெங்கட் பிரபுவும் ஆதரிக்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்.
விளக்கம்
இது தொடர்பாக பேசிய வெங்கட் பிரபு, ”என்னை போன்ற கமர்சியல் படங்கள் எடுக்கும் எல்லா இயக்குனர்களுக்கும் பொருந்தக்கூடிய கருத்துதான் இது”.
”கார்த்திக் சொல்வது உண்மையான கருத்தே. எல்லா கமர்சியல் படங்களும் ஒரே மாதிரி இருப்பதால் அவர் அதை விமர்சித்து இருக்கிறார். ஆனால் கமர்சியல் படம் இல்லாமல் வித்தியாசமான படங்களை கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?” என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
No comments