கட்டுகஸ்தோட்டையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது.
பல்லேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கும் அவரது நண்பருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments