யாழில் பெண்கள் பாடசாலை அருகில் விடுதி சுற்றிவளைப்பு - பெண்கள் உட்பட ஐவர் கைது
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நீண்டகாலமாக சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதியொன்று பொலிஸாரால் திடீரென முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது, விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (24.4.2024) இரவு யாழ்ப்பாணம் பொலிஸாரால் (Jaffna police) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ். நகரில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலைக்கு அண்மையில் தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விடுதியே இவ்வாறு பொலிஸாரால் நேற்று இரவு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, விடுதியில் சமூகப்பிறழ்வில் ஈடுபட்டதாக கூறப்படும் 4 பெண்களும், விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும் அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments