தமிழர் தாயக பகுதியில் போதைப்பொருளுடன் பெண் கைது - பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
கிளிநொச்சியில் (Kilinochchi) ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (26.04.2024) கிளிநொச்சி - திருநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநகர் பகுதியில் நேற்றையதினம் (26) பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபரான குறித்த பெண் கிளிநொச்சி பொலிஸாரால் (Kilinochchi police) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பெண்ணை இன்றையதினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
No comments