அஜித் எடுத்த அதிரடி முடிவு.. குட் பேட் அக்லி பற்றி வந்த முக்கிய அப்டேட்
நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் அறிவித்ததில் இருந்தே பல்வேறு காரணங்களுக்காக தாமதம் ஆகி வருகிறது.
அசர்பைஜான் நாட்டில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் படக்குழு சென்னை திரும்பியது. அதன் பிறகு ஷூட்டிங் மீண்டும் தொடங்காமல் இருக்கிறது.
ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்
இந்நிலையில் அஜித் அடுத்த படமான குட் பேட் அக்லீ படத்தின் ஷூட்டிங் வரும் மே 10ம் தேதி முதல் தொடங்க இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முடிவெடுத்து பணிகளை செய்து வருகிறாராம்.
அதனால் அஜித் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பணியாற்றப்போகிறார். குட் பேட் அக்லீ படத்தில் அஜித் ஜோடியாக 22 வயது இளம் நடிகை ஸ்ரீலீலா நடிக்க இருக்கிறாராம்.
No comments